கண்பார்வையில்லாத இரண்டு நபர்களுக்கு பிரெய்லி எழுத்துக்கள் அடங்கிய வாக்காளர்அடையாள அட்டை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020 குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  இயக்குநர் திரு.ஞானசேகரன்தலைமையில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை  இயக்குநர் மற்றும்  பார்வையாளர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளை உள்ளடக்கிய 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 12,68,253 ஆண் வாக்காளர்களும் 13,11,242 பெண் வாக்காளர்களும் 93 இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 25,79,588 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் 18-19 வயது நிரம்பிய -26,107 நபர்களும் 20 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள 25,53,481 நபர்களும் ஆக மொத்தம் 25,79,588 நபர்கள் உள்ளார்கள்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலினை வட்டாட்சியர் அலுவலங்கள்,கோட்டாட்சியர் அலுவலங்கள்,வாக்காளர்  பதிவு அலுவலங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து வாக்குச்சாவடி  அமைவிடங்களில் வாக்காளர்கள் பார்வையிடலாம் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட மனு அளிக்கலாம் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 பெயர் நீக்கம் செய்ய படிவம் 7 பெயர் மற்றும் இதர திருத்தங்கள் செய்திட படிவம் 8 ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8ஏ மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க படிவம் 6 ஏல் விண்ணப்பிக்க கால அவகாசங்கள் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இப்பணிகள் மேம்பாடு குறித்து இன்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகளும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் மரு.மணிஷ்.நாரணவரே மாவட்ட வருவாய் அலுவலர் திரு.முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல்  திருமதி சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.செந்தில், தேர்தல் வட்டாச்சியர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.