திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் சுகாதாரப்பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் சுகாதாரப்பணிகள் தொடா;பான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசுதலைமையில்  நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்ததாவது: 
குடும்பநல திட்ட செயல்பாடுகள் :
     இவற்றில் முதல் குழந்தையுடன் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் தற்காலிக கருத்தடை முறை ஏதேனும் ஒன்றினை பின்பற்ற வேண்டுமெனவும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள தாய்மார்கள் அனைவரும் நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைக்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
பொதுசுகாதார செயல்பாடுகள் :
உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.  அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவங்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதன் மூலம் பொதுமக்களிடையே நம்பிக்கையினை ஏற்படுத்த முடியும்.  எனவே இனிவரும் காலங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க வேண்டும்.
மரு.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் உலீஜீய காலங்களில் உரிய தவணை தொகைகள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் சென்றடைய வேண்டும்  அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும். 
பிரசவத்திற்கு பின் அனைத்து தாய்மார்களையும் தொடா;ந்து கண்காணிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அவ்வாறு கண்காணிக்கப்படும் பொழுது நிலுவையில் உள்ள மரு.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் தவணை தொகைகளை உடனுக்குடன் சரிசெய்து ஏழை தாய்மார்கள் பயனடைய செய்ய வேண்டும்.  
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் குடும்ப நல அறுவை சிகிச்சைகளை இனிவரும் காலங்களில் அதிகப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் உயர்பிறப்பு விகிதம்  குறைக்கப்படும். 
காசநோய் :
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிக்‘ய் போஜன் திட்டத்தின் மூலம் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் புறநோயாளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 2 நோயாளிகளையாவது காசநோய் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்க வேண்டும். 


தொழுநோய்: 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த மாதம் 3 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டு தொடா;ந்து தொழுநோய்க்கான சிகிச்சைகள் சிறப்பாக அளிக்க வேண்டும்.
மனநலம் :
போதை மீட்பு மையம் மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. புறநோயாளிகள் பிரிவில் வரும் குடிபழக்கத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை போதை மீட்பு மையத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, தெரிவித்துள்ளார். 
இந்நிகழ்ச்சியில் கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை மருத்துவர் வனிதா இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்  மருத்துவர் கோபிநாத், துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டர்.பாலசுப்ரமணியன், மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர். ஆ.ஜெகநாதன்,  மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.காமராஜ், மற்றும் உடன் உள்ளனர்.